மதுரை ஆரப்பாளையம், அம்மா பாலம் ரவுண்டானா அருகில் 32 கிலோ கஞ்சா கடத்தல், 5 நபர்கள் கைது
மதுரை மாநகர், கரிமேடு C5, காவல் நிலையம், சார்பு ஆய்வாளர் M.சுந்தரபாண்டியன் அவர்கள் தன் அலுவல் சம்பந்தமாக காவல் நிலையத்தில் இருந்த போது, ரகசிய தகவலாளி ஒருவர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி ஒரு கும்பல் கஞ்சாவை ஆரப்பாளயம் அம்மா பாலம் ரவுண்டானா வழியாக கடத்தி வர இருக்கிறார்கள் என்றும், அவர்கள் வருவதற்கு முன் யாரும் போலீசார் இருக்கிறார்களா என ஒரு இரு சக்கர வாகனத்தில் நோட்டமிடுவார்கள் என தகவல் கொடுத்தும் மேலும் வண்டி நம்பர்களையும் கூறினார்,
ரகசிய தகவலாளி அவர்கள் கொடுத்த தகவலின்படி சார்பு ஆய்வாளர் அவர்கள், ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்களின் அனுமதி பெற்று, சக காவலர்கள், மற்றும் ரகசிய தகவலாளி ஆகியோருடன் தக்க உபகரணங்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று மறைந்து நின்று இருந்த போது, ரகசிய தகவலின்படி TN 64 L 3813 இரு சக்கர வாகனத்தில் வந்தவரை மடக்கிப் பிடித்து விசாரித்த போது அவர் பெயர் பிரவின் ராஜ் என தெரிய வந்தது. அடுத்து ஐந்து நிமிடத்தில் அந்த வழியாக வந்த TN 07 AW 0955 என்ற நான்கு சக்கர வாகனத்தை ரகசிய தகவலாளி அடையாளம் காட்ட மறைந்திருந்த காவலர்கள் வாகனத்தை நிறுத்த அதிலிருந்த நான்கு நபர்கள் போலீசாரை பார்த்தவுடன் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி செல்ல எத்தனித்தனர், அவர்களை காவலர்கள் வளைத்து பிடித்தனர். அதன் பின் வாகனத்தை சோதனை செய்த போது வாகனத்தின் பின் சீட்டில் இரண்டு பிஸ்கட் கலர் சாக்கு மூடையில் கஞ்சா வைத்திருப்பது தெரிந்தது.
மேலும், அவர்கள் கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்த போது அவர்கள்
1) செல்லூர், பூந்தமல்லி நகரைச் சேர்ந்த செல்லக்கண்ணு மகன் ரவி வயது 33/2020,
2)பெத்தானியபுரம், மேட்டுத்தெரு, தங்கப்பாண்டி மகன் தினேஷ்குமார், வயது 28/2020,
3) ஆண்டிபட்டி, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஏட்டையா மகன் கண்ணன் வயது 46/2020,
4)கூடலூரை சேர்ந்த மச்சக்காளை மகன் பெரிய கருப்பன் வயது 62/2020,
5) முடக்குச்சாலையை சேர்ந்த முத்தையா மகன் பிரவீன்ராஜ் வயது 22/2020, எனவும் தெரிய வந்தது. இவர்கள் ஐந்து பேரும் அந்த வாகனத்தில் பெரியகுளம் சென்று இனம் தெரியாத ஒரு நபரிடம் இருந்து கஞ்சாவை குறைந்த விலைக்கு வாங்கிக் கொண்டு வந்து மதுரையில் கூடுதல் விலைக்கு விற்பதற்காக வந்ததாக கூறினார்கள்.
அவர்களின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் அவர்களை கைது செய்தும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்கை பறிமுதல் செய்தும், அதன் பின் காவல் ஆய்வாளர் திரு பாலமுருகன் அவர்களின் உத்தரவின்படி U/S 8 (c) r/w 20 (b), (ii)(C) NDPS Act ன்படி வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி அவர்களை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர், அதன்பின் நீதி மன்றத்தின் உத்தரவின்படி அவர்களை சிறையில் அடைத்தனர்.