
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு சம்பந்தமான கலந்தாய்வு கூட்டம்
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், இன்று (12.03.2025) தமிழக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவின் காவல்துறை தலைவர் திருமதி. அ.கயல்விழி இ.கா.ப., அவர்கள் தலைமையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மதுரை மாநகர காவல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு, கூடுதல் துணை ஆணையர்
திரு. காட்வின் ஜெகதீஷ்குமார் மற்றும் மதுரை மாவட்ட கூடுதல் காவல் உதவி கண்காணிப்பாளர் திரு.ஆறுமுகம் மற்றும் மதுரை மாநகர/ மாவட்ட காவல் உதவி ஆணையர்கள் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
