காவல் துறையில்
சிறப்பாக பணியாற்றிய 15 பேருக்கு பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது
11.10.2020
இராமநாதபுரம் மாவட்டம்
ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையில்
சிறப்பாக பணியாற்றிய 15 பேருக்கு
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில்
மாதாந்திர குற்ற
குழு கூட்டம் நடைபெற்றது.
அதில் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகளை முறையாக புலனாய்வு செய்து வழக்கு நாட்குறிப்பு எழுதுவதில் சிறப்பாக செயல்பட்ட பரமக்குடி காவல் துணை கண்காணிப்பாளர்
வேல்முருகனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
கீழக்கரை, எஸ்.பி.பட்டினம் ஆகிய காவல் நிலையங்களில் நடந்த 6 முக்கிய திருட்டு வழக்குகளில் சம்பவ இடத்தில் கிடைத்த கைவிரல் பதிவுகளை எடுத்து பழங் குற்றவாளிகளின் கை ரேகையுடன் ஒப்பிட்டு பார்த்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட பாரிஸ் கான், மணிகண்டன், மகாலிங்கம் ஆகியோரை கண்டுபிடித்து திருடப்பட்ட களவு சொத்துகளை மீட்பதில் முக்கிய பங்காற்றிய ராமநாதபுரம் கை விரல் ரேகை பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் யூசுப், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் லோகசந்தர், சேராஜ், காவலர் முருகேஷ் , பிற வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறை பணியாளர்கள் 10 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
