புளியங்குடி உட்கோட்டத்தில் காணாமல் போன நபர்கள் குறித்து நிலுவையில் இருந்த வழக்குகளில் காணாமல் போன 9 நபர்கள் கண்டு பிடிக்கப் பட்டனர்
தென்காசி மாவட்டம், புளியங்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சுவாமிநாதன் அவர்களின் தலைமையில் காணாமல் போனதாக இதுவரை நிலுவையில் உள்ள 32 வழக்குகளில் அவர்களது உறவினர்களை வரவழைத்து அவர்களிடம் அதுபற்றி ஏதேனும் தகவல் உள்ளதா என்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் காணாமல் போனதாக புகார் அளித்த நபர்களின் உறவினர்களிடம் தகவல்களை கேட்டதில் காணாமல் போன நபர்கள் குறித்து கிடைத்த தகவலின் மூலம் 9 நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தொடர்பு கொண்டு காணாமல் போன நபர்கள் அந்த இடத்தில் வசித்து வருவது உறுதி செய்யப்பட்டது.
இதனடிப்படையில் புளியங்குடி காவல் நிலைய குற்ற எண் 460/2015 ன் படி காணாமல் போன சிந்தாமணியை சேர்ந்த லூர்துசாமி என்ற நபர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.
வாசுதேவநல்லூர் காவல்நிலைய குற்ற எண் 285/2020 ன் படி காணாமல் போன கிருஷ்ணம்மாள் (16) என்ற சிறுமி கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.
வாசுதேவநல்லூர் காவல்நிலைய குற்ற எண் 184/2019 ன் படி காணாமல் போன விஜய் பாபு மற்றும் கோபிகா ஆகியோர் சேலத்தில் உள்ள தனது நண்பருடன் வசித்து வருவதாக விஜய பாபுவின் மனைவி செல்வி கூறியதன் பேரில் அவர்கள் சேலத்தில் வசிப்பது சேலம் காவல்துறையினரின் மூலம் உறுதி செய்யப்பட்டது.
வாசுதேவநல்லூர் காவல்நிலைய குற்ற எண் 265/2019 ன் படி காணாமல் போன அருதுணை பிரபு என்ற சிறுவன் சென்னையில் இருப்பதாக அவரின் பெற்றோர் கூறியதன் பேரில் அச்சிறுவன் சென்னையில் இருப்பது சென்னை காவல் துறையின் மூலம் உறுதி செய்யப்பட்டது.
சிவகிரி காவல் நிலைய குற்ற எண் 98/2020 ன் படி காணாமல் போன கார்த்திகாயினி என்ற பெண் பிரபு என்ற நபரை திருமணம் செய்து சேலத்தில் வசித்து வருவதாக அவரின் பெற்றோர் கூறியதன் பேரில் அவர் சேலத்தில் இருப்பது சேலம் காவல்துறையினரின் மூலம் உறுதி செய்யப்பட்டது.
கடையநல்லூர் காவல் நிலைய குற்ற எண் 341/2020 ன் படி காணாமல் போன மஞ்சுளா(24) என்ற பெண் திருமணம் செய்து கொண்டு வீடு திரும்பியுள்ளார்.
கடையநல்லூர் காவல் நிலைய குற்ற எண் 422/2020 ன் படி காணாமல் போன அபர்ணா (21) என்ற பெண் திருமணம் செய்து மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.
சேர்ந்தமரம் காவல்நிலைய குற்ற எண் 229/2020 ன் படி காணாமல் போன அன்னக்கிளி என்ற பெண் திருமணம் செய்து சென்னையில் வசித்து வருவதாக அவர்களின் பெற்றோர் கூறியதன் பேரில் அங்கு சென்னையில் வசித்து வருவது காவல்துறையினரின் மூலம் உறுதி செய்யப்பட்டது.
சொக்கம்பட்டி காவல்நிலைய குற்ற எண் 336/2019 ன் படி காணாமல் போன கலா (29) என்ற பெண் தற்போது தென்காசியில் வசித்து வருவதாக அப்பெண்ணின் உறவினர்கள் கொடுத்த தகவலின் பேரில் அவர் தென்காசி இருப்பது காவல்துறையினரின் மூலம் உறுதி செய்யப்பட்டது.
மேற்படி 32 வழக்குகளில் 9 வழக்குகள் இன்று முடித்து வைக்கப்பட்டது
