Police Recruitment

: மதுரை, ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் காதல் திருமணம் செய்துகொண்ட பெண் தூக்கிட்டு தற்கொலை, தந்தை காவல் நிலையத்தில் புகார்

: மதுரை, ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் காதல் திருமணம் செய்துகொண்ட பெண் தூக்கிட்டு தற்கொலை, தந்தை காவல் நிலையத்தில் புகார்

மதுரை, ஜெய்ஹிந்த்புரம்,B6, காவல் நிலையம் சரகத்திற்குட்பட்ட பகுதியான ஜெய்ஹிந்த்புரம், புலிப்பாண்டி தெரு, செட்டியார் காம்பவுண்ட்டு, டோர் நம்பர் 96 ல் வசித்து வருபவர் சிக்கந்தர் மகன் ரியாஜான் வயது. 62/2020, இவரது மனைவி தாஜ் கடந்த 3 மாதத்திற்கு முன் இறந்து விட்டார்
இவருக்கு அம்மாச்சி பீவி என்ற மகளும், மைதீன் என்ற மகனும் உள்ளனர். அம்மாச்சி பீவிக்கு கடந்த 2016 ம் ஆண்டு வசந்த நகரை சேர்ந்த ராஜேஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார் இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அம்மாச்சி பீவி யாருடனோ செல் போனில் பேசி தொடர்பில் இருந்து வந்துள்ளார். அதனை அறிந்த அம்மாச்சிபீவியின் கணவர் ராஜேஸ் கண்டித்து வந்துள்ளார், அதனால் குடும்பத்தில் அவர்களுக்குள் பிரச்சனை இருந்து வந்துள்ளது. அம்மாச்சிபீவி கடந்த ஆகஸ்ட்டு மாதம் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் அவரது கணவர் ராஜேஸ் உடன் கோபித்து கொண்டு ஜெய்ஹிந்த்புரம், புலிப்பாண்டி தெருவில் உள்ள தனது அப்பா வீட்டிற்கு வந்துள்ளார், பின்னர் அம்மாச்சிபீவி தனது கணவருடன் செர்ந்து வாழ விரும்பி அனைத்து மகளீர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

காவல் நிலையத்தில் இருவரையும் அழைத்து விசாரணை செய்து சேர்ந்து வாழ அனுப்பி வைத்துள்ளனர், இந்த நிலையில் கடந்த 15 ம் தேதி கணவர் ராஜேஸ் தனது மாமனார் ரியாஜான் அவர்களுக்கு போன் செய்து அம்மாச்சிபீவி மீண்டும் யாருடனோ செல் போனில் பேசி தொடர்பில் இருப்பதாக சொல்லி உடனே வீட்டிற்கு வரச் சொல்லியுள்ளார், அதன்படி அம்மாச்சிபீவியின் தந்தையார் தன் மகள் வீட்டிற்கு சென்று மகளை கண்டித்து விட்டு தனது வீட்டிற்கு வந்து இருந்த போது மதியம் 11.45 மணிக்கு மருமகன் ராஜேஸ், அம்மாச்சி பீவியையும், இரண்டு குழந்தைகளையும் அழைத்து வந்து தனது மாமனார் வீட்டில் விட்டுச்சென்றுள்ளார். அப்பாவும் தன மகளுக்கு அறிவுரை சொல்லி விட்டு வேலைக்கு சென்று விட்டார், அதன்பின் அப்பா ரியாஜானின் மகன் மைதீன் வீட்டில் குழந்தை அழுவதாகவும், கதவு உள்பக்கமாக பூட்டியிருப்பதாகவும் தனக்கு பக்கத்து வீட்டிலிருப்பவர்கள் போன் செய்ததாகவும் கூறி உடனே வீட்டிற்கு சென்று பார்கும்படியும் கூறியுள்ளார். இதன்படி ரியாஜான் அவர்கள் மதியம் சுமார் 1.30 மணியளவில் தன் வீட்டிற்கு சென்று பார்த்த போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. உடனை அவர் தன்னிடமிருந்த சாவியால் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது தன் மகள் சீலிங்கில் உள்ள இரும்பு கொக்கியில் சேலையால் தூக்கிட்டு தொங்கி கட்டிலில் கால்கள் மடக்கிய நிலையில் இருந்துள்ளார். உடனே அரிவாள்மனையால் சேலையை அருத்து தனது மகளை தூக்கிலிருந்து இறக்கி பார்த்த போது, இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். உடனே தனது உறவினர்களுக்கு தகவல் சொல்லி விட்டு காவல் நிலையம் வந்து தன் மகள் இறப்பின் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு புகார் அளித்துள்ளார்,

இந்த புகாரின் அடிப்படையில் உதவி ஆணையர் திரு. சூரக்குமார் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு.சத்தியராஜ் அவர்கள் வழக்கு பதிவு செய்து, உதவி ஆணையர் திரு. சூரக்குமார் அவர்கள் விசாரணை செய்து, மேற்கொண்டு வழக்கை RDO விசாரணைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.