உயிர் நீத்த காவலர்களுக்கு திருப்பத்தூரில் அஞ்சலி
திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை சார்பில் தேசிய காவலர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உயிர் நீத்த காவலர்களுக்கு 63 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருப்பத்தூர் அடுத்த பாச்சல் பகுதியில் உள்ள ஆயுதப் படை மைதானத்தில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவனருள் கலந்து கொண்டார். தமிழகத்தில் வீரமரணமடைந்த 264 காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் 21 துப்பாக்கிகள் ஏந்திய போலீசார் வான் நோக்கி மூன்று முறை சுட்டு அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் தங்கவேல் உள்ளிட்ட துணை கண்காணிப்பாளர்கள், மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர்கள் பழனி உட்பட ஏராளமான காவலர்கள் கலந்து கொண்டனர்.
