உசிலம்பட்டி, காவலர்கள் இடமாற்றம்
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காவல் சரகத்திற்கு உட்பட்ட உசிலம்பட்டி நகர் காவல் நிலையம், தாலுகா காவல் நிலையம், மற்றும் எழுமலை காவல் நிலையம், SI & காவலர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் பணியாற்றிய ராமர் எஸ்.எஸ்.ஐ அவர்களை சிந்துபட்டி காவல் நிலையத்திற்கும், நகர் காவல் நிலையத்தில் பணியாற்றிய குணபாலன் எஸ்.எஸ்.ஐ அவர்களை சாப்டூர் காவல் நிலையத்திற்கும், அதே உசிலம்பட்டி டவுன் காவல் நிலையத்தில் பணியாற்றிய வேல்முருகன் எஸ்.எஸ்.ஐ அவர்களை டி. கல்லுப்பட்டி காவல் நிலையத்திற்கும், தாலுகா காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் ராமகிருஷ்ணன் அவர்களை எழுமலை காவல் நிலையத்திற்கும், உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் பணியாற்றிய கனேசன் எஸ.எஸ்.ஐ. அவர்களை காடுபட்டி காவல் நிலையத்திற்கும், எழுமலை காவல் நிலையத்தில் பணியாற்றிய கனேசன் என்ற காவலரை பேரையூர் காவல் நிலையத்திற்கும், அதே எழுமலை காவல் நிலையத்தில் பணியாற்றிய சேகர் என்ற காவலரை சேடபட்டி காவல் நிலையத்திற்கும், பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித்குமார் அவர்கள் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
