கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்த அமைச்சுப் பணியாளர் சாமிநாதன் அவர்களின் திருவுருவ படத்திற்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் காவல் அதிகாரிகள் ஆணையரகத்தில் மலரஞ்சலி செலுத்தினர். (22.10.2020 )
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் இன்று (22.10.2020) காலை நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், சென்னை காவல் ஆணையரகத்தில் பதிவறை உதவியாளராக பணிபுரிந்து வந்த திரு.K.S.சாமிநாதன் (58) என்பவர் கொரோனா தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்ததையடுத்து, அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் முனைவர் ஏ.அமல்ராஜ்,இ.கா.ப., (தலைமையிடம்), துணை ஆணையாளர் திரு.பெரோஸ்கான் அப்துல்லா, இ.கா.ப., (நிர்வாகம்), காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர். மறைந்த சாமிநாதன் அவர்களுக்கு காயத்ரி (52) என்ற மனைவியும், திவ்யரக்ஷா (30) மற்றும் காவ்யரக்ஷா (27) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.
