மதுரை, திருப்பரங்குன்றம் காவல் நிலைய சுற்றுச் சுவர்களில் விழிப்புணர்வு ஓவியங்கள்
மதுரையில் அதிகரித்து வரும் பாலியல் வன் கொடுமைக்கு எதிராக திருப்பரங்குன்றம் காவல் நிலைய சுற்றுச் சுவர்களில் ஓவியங்கள் வரைந்து விழிப்புணர்வு செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிபவர் திருமதி. மதனகலா அவர்கள். இவர் பெண்கள், மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களை தடுக்கும் பொருட்டு, திருப்பரங்குன்றம் காவல் நிலைய சுற்று சுவர்களில் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து பொது மககளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
காவல் ஆய்வாளர் மதன கலா அவர்களின் இந்த முயற்ச்சிக்கு மகளிர் அமைப்புகளிடமும், பொது மக்களிடமும் நல்ல வரவேற்ப்பு இருந்து வருகிறது.
