மனித நேயமிக்க மக்கள் சேவையில் கூடுவாஞ்சேரி போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா .திரு .அன்புராஜ் அவர்கள்
கூடுவாஞ்சேரி சாலையில் செல்லும் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமன்றி கூடுவாஞ்சேரியை சுற்றியுள்ள ஏழை எளிய மக்களுக்கும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கும் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கும் மலைவாழ் மக்களுக்கும் வீடு தேடி சென்று இலவசமாக அரிசி மற்றும் மளிகை பொருட்களை தன்னுடைய ஊதியத்திலிருந்து வழங்கி வருகிறார் கூடுவாஞ்சேரி போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர்
ஐயா .திரு. அன்புராஜ் அவர்கள் மற்றும் கூடுவாஞ்சேரி சந்திப்பில் தினம்தோறும் அன்னதானம் 50க்கும் மேற்பட்டோர்க்கு வழங்கிவருகிறார் பசி என்று யாரும் இருக்கக்கூடாது என்ற நல்லெண்ணத்தோடும் அன்பாகவும் பாசமாகவும் மக்கள் பணியை சேவை என்று கருதாமல் தன் வாழ்நாள் முழுவதும் தியாகமாக செய்வேன் என்று உறுதிபடக் கூறுகிறார் கூடுவாஞ்சேரி போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா. திரு. அன்புராஜ் அவர்கள் இதுமட்டுமின்றி விபத்து ஏற்பட்டு உயிருக்கு போராடும் நிலையில் இருந்த ஒருவரை முதல் உதவி செய்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று உயிரை காப்பாற்யதற்கு அந்த குடும்பத்தினர் இரு கை கூப்பி நன்றியை தெரிவித்தனர். இந்த நல்ல செயலை கருதி செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மதிப்பிற்குரிய D.கண்ணன் B.E அவர்கள் கூடுவாஞ்சேரி போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு அன்புராஜ் அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார் .இப்படி காவல்துறையினருக்கு உதாரணமாக திகழ்வதும்மின்றி இது போன்ற நன்மையான செயல்களை மற்றவர்களும் செய்ய ஊக்குவிக்கும் வண்ணமாக இவர் விளங்கிக் கொண்டிருக்கிறார் . கூடுவாஞ்சேரி சார்ந்த மக்கள் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் ஐயா அவர்களுக்கு நன்றியை தெரிவிக்கும் வண்ணமாக கடவுள் நேரில் வர மாட்டார் ஆனால் இதுபோன்ற நன்மையான செயல்களைச் செய்யும் ஒவ்வொருவரிடத்திலும் கடவுள் வெளிப்பட்டு கொண்டிருக்கிறார் என்பதை நாங்கள் உணர்கிறோம் என்று கூறுகின்றனர்.
