மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகில் உள்ள அயோத்திபட்டியைச் சேர்ந்தவர் செல்வக்குமார் (22). இவர் சென்னை ஆயுதப் படையில் பணிபுரிகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரைக் காதலித்தார். அவரிடம் திருமண ஆசை காட்டி நெருங்கி பழகினார்.
இதற்கிடையில், செல்வக்குமார் வேறொரு பெண்ணை திருமணம் செய்தார்.
இதுபற்றி தெரியாத மாணவி, தன்னை திருமணம் செய்யும்படி வற்புறுத்தியதால் அவரையும் செல்வக்குமார் திருமணம் செய்துவிட்டு பெற்றோர் வீட்டில் விட்டு வந்தார்.
இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக மாணவியைப் பார்க்க செல்வகுமார் செல்லாமல் இருந்ததால் சந்தேகமடைந்த மாணவி உறவினர்களிடம் விசாரித்தபோது, செல்வகுமாருக்கு ஏற்கெனவே திருமணம் நடந்தது தெரிய வந்தது.
இதையடுத்து மாணவி கொடுத்த புகாரின்பேரில் செல்வக்குமாரை திருமங்கலம் மகளிர் போலீஸார் கைது செய்தனர்.