Police Department News

தவறவிட்ட பணத்தை உரிய நபரிடம் கொண்டுபோய் சேர்த்த நபரை கௌரவித்த காவல் ஆய்வாளர்

தவறவிட்ட பணத்தை உரிய நபரிடம் கொண்டுபோய் சேர்த்த நபரை கௌரவித்த காவல் ஆய்வாளர்

திருப்பூர் மாநகர்
பாலாஜி என்டர்பிரைசஸ் என்ற கம்பெனியில் கணக்காளராக வேலை பார்த்து வருபவர் விஜயகுமார் இவர் நேற்று காலை வேறொரு கார்மெண்ட்ஸ் முதலாளியிடம் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் (Rs 1,50000)வாங்கிக் கொண்டு வரும் போது பணத்தை தவற விட்டார் உடனடியாக வடக்கு காவல் நிலையம் சென்று புகார் அளித்தார் இந்நிலையில் நஞ்சப்பா அரசு மேல்நிலைப் பள்ளியின் அருகில் அந்தப் பணத்தை கண்டெடுத்த மாணிக்கம் என்பவர் அதனை வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் பணத்தை தவற விட்டவரை வரவழைத்து வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.கணேசன் அவர்கள் பணத்தை ஒப்படைத்தார் மேலும் பணத்தை கொண்டு வந்து காவல் நிலையத்தில் கொடுத்தவரையும் வரவழைத்து ஆய்வாளர் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.