மதுரை, அண்ணாநகர் காவல் ஆய்வாளர் அவர்களின் மாபெரும் கஞ்சா வேட்டை, இருவர் கைது
மதுரை மாநகர், அண்ணாநகர் E3 சட்டம், ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. P.பூமிநாதன் அவர்கள் நிலைய அலுவல் விசயமாக காவல் நிலையத்தில் ஆஜரில் இருக்கும் போது, ரகசிய தகவலாளி ஒருவர் காவல் நிலையம் வந்து கஞ்சா கடத்தப்படும் தகவலை ஆய்வாளரிடம் கூற, ஆய்வாளர் திரு. பூமிநாதன் அவர்கள், அதை மதுரை மாநகர் சட்டம், ஒழுங்கு காவல் உதவி ஆணையர் திருமதி. லில்லி கிரேஸ் அவர்களிடம் கூறி, அவர்களின் அனுமதி பெற்று தனது காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் திரு. ரீகன், திரு. மணிமாறன் மற்றும் தலைமை காவலர் 3454.திரு.ராம்குமார், மற்றும் தலைமை காவலர் 1242, திரு.கார்திக், தலைமை காவலர் 3589, திரு. ரெங்கநாதன், முதல் நிலை காவலர் 739 திரு. தமிழரசன், முதல் நிலை காவலர் 2502, திரு. கார்திக்ராஜா, மற்றும் காவலர் 2738, திரு. முனீஸ்வரன் ஆகியோருடன், தேவையான உபகரணங்களை நிலையத்திலிருந்து, எடுத்துக் கொண்டு 8.15 மணிக்கு காவல் நிலையத்திலிருந்து புறப்பட்டு ரகசிய தகவலாளி தெரிவித்த இடமான மதுரை ரிங் ரோடு, சரஸ்வதி டிம்பர் முன்பு உள்ள மெயின் ரோட்டில் 8.40 மணிக்கு சென்று அனைவரும் தனித் தனியே மறைந்து நின்று கண்காணித்து வந்த போது அந்த வழியாக வந்த KL 01 AP 6659 Innova வெள்ளை நிற காரை ரகசிய தகவலாளி அடையாளம் காட்டி விட்டு மறைந்த பிறகு காவலர்கள் அந்த வாகனத்தை சுற்றி வளைத்தனர், ஆனால் காவலர்களை பார்த்ததும் வாகனத்தை திருப்பி தப்பி செல்ல முயற்ச்சித்தனர், ஆனால் காவலர்கள் வாகனத்தை மடக்கி பிடித்து சோதனை இட்டதில் வாகனத்தின் பின் சீட்டு பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 106 காக்கி நிற பாலிதீன் கவர்களை சோதனையிட்ட போது அதில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள் கஞ்சா இருப்பது கண்டுபிடி்கப்பட்டது. காரில் கஞ்சா இருந்த காரணத்தால் காரை ஓட்டி வந்தவரை கைது செய்து விசாரித்த போது அவர் கேரளா திருவனந்தபுரத்தை சேர்ந்த தேவநேசன் மகன் ராபர்ட் விக்டர் வயது 24 என தெரியவந்தது, மேலும் அவரிடம் விசாரித்ததில், கேரளா காட்டாகடை பகுதியை சேர்ந்த அகில் அன்பவர் ஆந்திரா மாநிலம் விசாகபட்டினம் சென்று வாங்கி வரச் சொன்னதாகவும் அதற்கு தனக்கு ரூபாய் ஒரு லட்சம் சம்பளம் கொடுத்ததாகவும் கூறினார்.
அவரின் வாக்குமூலத்தின் பேரில் கடத்தி வந்த கஞ்சா, கார், கடத்தலுக்கு பயன்படுத்திய செல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர், அதன் பின் இவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கேரளாவை சேர்ந்த அகில் என்பவரையும் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
