Police Department News

மதுரையில் மீண்டும் ஒரு தீ விபத்து துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்

மதுரையில் மீண்டும் ஒரு தீ விபத்து துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்

மதுரை, தெற்குமாசி வீதியில் பட்டாசு நெருப்பால் அட்டை குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. அதனை தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்..

மதுரை தெற்குமாசி மகால் 2 வது தெரு பகுதியில் உள்ள ஏ.கே.அஹ்மத் என்ற ஜவுளிக் கடைக்கு சொந்தமான அட்டை உள்ளிட்ட பயன்படாத பொருட்களை அடுக்கி வைக்கப்பட்ட குடோனின் அருகில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட நெருப்பு துகள்கள் பட்டதால் அட்டை பெட்டிகள் தீ பற்றி எரிந்தது. இதனையடுத்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

தெற்குமாசி வீதி பகுதியில் ஜவுளிக்கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மீட்பு பணியின் போது இரு தீயணைப்பு வீரர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த நிலையில் அதே பகுதியில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது அப்பகுதியில் உள்ள பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது,

தீபாவளி நாளன்று அடுத்தடுத்து ஏற்பட்ட தீ விபத்துகளால் பொது மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.