தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை துணை இயக்குனராக ஐ.பி.எஸ் அதிகாரி லட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புதுறை இயக்குனராக டி.ஜி.பி.யாக ஐ.பி.எஸ். அதிகாரி கந்தசாமி நியமனம் செய்யப்பட்டார். குஜராத்தில் இவர் அதிகாரியாக இருந்த போது அப்போது அமித்ஷாவையே கைது செய்தவர்.இவரது நியமனத்தின் போதே லஞ்ச ஒழிப்புதுறை அதிக கவனம் பெற்றது. இந்த நிலையில்தான் இதன் துணை இயக்குனர் பதவிக்கு IPS அதிகாரி லட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் காத்திருப்பு பட்டியலில் இருந்தவர்.
சென்னை மாநகர தெற்கு மண்டல இணை கமிஷனர் பதவியில் இருந்த IPS லட்சுமி சொந்த காரணங்கள் காரணமாக விடுமுறையில் இருந்தார். இந்த விடுமுறையை தொடரந்து இவர் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார். கடந்த ஆட்சியில் பல்வேறு முறை காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு இவர் தொடரந்து புறக்கணிக்கப்பட்டு வந்தவர்.
பெரிய பதவி எதுவும் வழங்கப்படாமல் தொடர்ந்து காத்திருப்பு பட்டியலில் இவர் இருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இவர் திடீரென விருப்ப ஓய்வு கேட்டிருந்தார் 2033 ல் தான் இவர் ஓய்வு பெற வேண்டும். என்றாலும் திடீரென விருப்ப ஓய்வு கேட்டார் இவர் ஏன் விருப்ப ஓய்வில் செல்ல முடிவெடுத்தார் என்பதற்கான தகவல்கள் ஏதும் வெளியாக வில்லை, ஐ.பி.எஸ., வட்டாரத்தில் இது பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது.
இந்த நிலையில்தான் திடீரென தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புதுறை துணை இயக்குனராக ஐ.பி.எஸ்., அதிகாரி லட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர். குரூப் 1 தேர்வு மூலம் டி.எஸ்.பி.,யாக பதவி ஏற்றார். பல்வேறு மாற்றங்களில் பல்வேறு பொறுப்புக்களில் பதவிகளை வகித்து இருக்கிறார். எஸ்.பி., யாக புரோமோசன் பெற்றவர். பின் டி.ஐ.ஜி., யாக பதவி உயர்வு பெற்றவர்.
அதன் பின் சென்னை மாநகர காவல் துறையில் தெற்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை கமிஷனராக பதவியில் நியமிக்கப்பட்டார். ஆனால் அதை தொடர்ந்து தனிப்பட்ட விடுப்பு , கட்டாய காத்திருப்பு பட்டியல் என்று இவருக்கு பொருப்பு ஏதும் வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் திடீரென தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புதுறை துணை இயக்குனராக ஐ.பி.எஸ்., அதிகாரி லட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.