ஒரு தாயின் கண்ணீரை துடைத்த மதுரை தெற்கு வாசல் B5, காவல் நிலையக் காவலர்
மதுரை தெற்கு வாசல் சந்திப்பு பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்பு 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நடு ராத்திரியில் அவ்வழியில் செல்லும் வாகனங்களை மறித்து தகராறில் ஈடுபட்டு வந்தார், அந்த நேரம் மதுரை, தெற்கு வாசல் காவல் நிலைய காவலர் திரு. பொன்னுச்செல்வம், ரோந்து பணியில் இருக்கும் போது அந்த நபரை பிடித்து விசாரித்தார், விசாரிக்கும் போது நன்றாக பேசி வந்த அந்த நபர் திடீர்ரென தகாத வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்தார், ஆனால் காவலர் பொருமையாக விசாரித்த போது அவரது பெயர் முத்து என்பதும், அவர் காரைக்கால் அருகே நெடுங்காடு ஊரைச் சேர்ந்தவர் என காவலர் பொன்னுச்செல்வம் யூகித்துக் கொண்டார். உடனே கூகுளில் நெடுங்காடு காவல் நிலைய போன் நம்பரை தேடி எடுத்து அங்கு போன் செய்து பேசிய போது, அங்குள்ள
காவலர் விவேக், அவர் மனநிலை சரியில்லாதவர் என தெரிவித்து அவரின் வீட்டில் சொல்லி விடுகிறேன் அவரை விட்டு விட கூறியுள்ளார். ஆனால் காவலர் பொன்னுச்செல்வம் மனது கேட்காமல் அவருக்கு டீ வாங்கி கொடுத்து முத்துவை தெற்கு வாசல் காவல் நிலையத்தின் அருகிலேயே அமர வைத்தார் ஆனால் விடியற்காலை 4 மணிக்கு முத்து காவலருக்கு தெரியாமல் ஓடி விட்டார்.
காவலர் பொன்னுசெல்வம் இரண்டு தினங்கள் தெற்கு வாசலில் பல பகுதிகளில் தனது ஓய்வு நேரத்தில் தேடி பார்த்தும் முத்து கிடைக்கவில்லை, பிறகு தன்னிடமுள்ள காவலர் வாட்ஸ்அப் குரூப்புகளில் முத்துவின் விபரத்தை பகிர்ந்துள்ளார், இரண்டு தினங்களுக்கு பின் நேற்று
முத்து ரயில் நிலையம் அருகேயுள்ள பிரபல ஜவுளிக் கடை அருகே இருப்பதாக தகவல் கிடைத்து அங்கே சென்று அவரை தெற்கு வாசல் காவல் நிலையம் அழைத்து வந்து அவருக்கு சாப்பாடு, வாங்கி கொடுத்து,
ஆடைகள் மாற்றி, மதியம் சாப்பாடு வாங்கி கொடுத்து
நட்பாக பேசி, மீண்டும் ஓடி விடாதவாறு, காவலர் பொன்னுசெல்வம் அவரை பார்த்துக் கொண்டார் அதன் பின் அவரின் வீட்டிற்கு தகவல் கொடுத்துள்ளார் அவர்களும் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த நிலையில் அவரை அழைத்துக் கொண்டு மாட்டுத்தாவணி அருகே சென்றார், ஆனாலும் முத்துவின் அட்டகாசம் தாங்காமல் மேலூரை நோக்கி தன் இரு சக்கர வாகனத்தில் அழைத்துசெல்லும் போது இரவு 8.30 மணியளவில் சிட்டம்பட்டி டோல் கேட் அருகே,முத்துவின் குடும்பத்தினர் எதிரே வந்த போது முத்துவை அவரது குடும்பத்தினரிடம் சேர்த்துள்ளார். அப்போதுதான் நெகிழச்செய்யும் முத்துவின் முழு விபரம் தெரிந்துள்ளது. முத்துவின் தந்தை பன்னீர்செல்வம் காலமாகி விட்டார், தாய் மீனாட்சி, உடன் பிறந்த தம்பி ஒருவர்
என்றும், திண்டுக்கல்லில் ஒரு மாதமாக காணவில்லை எனவும் மதுவுக்கு அடிமையாகி புத்தி பேதலித்து சுய நினைவு இல்லாமல் திரிந்திருக்கிறார், இவருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது. மகன் கிடைத்ததும் தாய் மீனாட்சி அவர்கள் கூறியது ஒரு மாதமாக மகனை காணாமல் தேடி, தேடி அலைந்தோம், இறைவன் அருளால் என் மகன் இன்று கிடைத்துள்ளான் என கண்ணீர் மல்க கூறினார்.
