போலீசாரின் அதிரடி சோதனையில் 14.900 கிலோ கிராம் கஞ்சா மற்றும் கார் பறிமுதல், இருவர் கைது…
05.11.2020 திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் தற்போது மாவட்டம் முழுவதும் தொடர் கஞ்சா சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து ஒட்டன்சத்திரம் பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து ஒட்டன்சத்திரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.கணேசன் அவர்கள் தலைமையில் திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.ராஜேந்திரன் அவர்கள் தலைமை காவலர்கள் திரு.சரவணன், திரு.பாலசுப்பிரமணியன், திரு.ரவீந்திரன் ஆகியோர் ஒட்டன்சத்திரம் தாராபுரம் ரோட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனை செய்ததில் அதில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது, இதையடுத்து காரில் வந்த ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த சுதாகர் வயது (37) மற்றும் தமிழரசி வயது(32) ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
மேலும் அவர்களிடமிருந்து 14.900 கிலோ கிராம் கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
