மதுரை, டவுன் ஹால் ரோட்டில் உள்ள தனியார் விடுதியில் மும்பையை சேர்ந்த மூதாட்டி மரணம்
மதுரை மாநகரம் திடீர் நகர் C1, காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான டவுன் ஹால் ரோட்டில் உள்ள ஒரு தனியார் விடுதியில் மதுரை, பேரையூர் தாலுகா, எழுமலை பகுதியை சேர்ந்த சுந்தரமகாலிங்கம் மகன் குருசாமி வயது 69/2020, அவர்கள் மேனேஜராக பணியாற்றி வருகிறார், இந்த நிலையில் கடந்த 10.ம் தேதி மும்பையை சேர்ந்த சதாசிவம் மனைவி லெக்ஷிமி அய்யர் வயது 68/2020, அவர்கள் மேற்படி விடுதியில் வந்து தங்கியிருந்தார். இந்த நிலையில்
கடந்த 12 ம் தேதி காலை 7.30 மணியளவில் விடுதியின் ரூம் பாய் ஜெயக்குமார் காபி வாங்கித் தர ரூமிற்கு வந்த போது ரூம் கதவு பாதி மூடிய நிலையில் இருந்த நிலையில் ரூம் பாய் குரல் கொடுத்தும் எந்த வித பதிலும் இல்லாத காரணத்தால் உடனே மேனேஜரிடம் தகவல் கூறினார். உடனே மேனேஜர் குருசாமி அவர்கள் நேரில் சென்று பார்த்த போது மேற்படி மூதாட்டி படுக்கையில் இறந்த நிலையில் இருந்துள்ளார் உடனே அவர்கள் திடீர் நகர்C1, காவல் நிலையத்திற்கு சென்று மேற்படி மூதாட்டியின் இறப்பு பற்றியும் மேலும் அவர்களின் உறவினர்களை கண்டுபிடித்து தகவல் கூறவும் புகார் கொடுத்துள்ளார், புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் திருமதி. கீதாலெட்சிமி அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு.பணராஜ் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
