மதுரையில் பட்டபகலில் வாலிபர் படுகொலை, தலையை துண்டாக வெட்டி வீசினர், காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை, சிறார் உள்பட 5 பேர் கைது
மதுரை, கீரைத்துரை, B4, காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான கீழவெளி வீதியில் தேவாலயம் அருகே மதுரை உத்தங்குடி பகுதியை சேர்ந்த முருகானந்தம் என்ற இளைஞர் சாலையில் நடந்து சென்ற போது ஒரு மர்ம கும்பல் கொடூரமாக வெட்டி தலையை தேவாலயம் வாசலில் வீசி சென்றது. தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர், இந்த கொலையில் மொத்தம் 11 பேர் ஈடுப்பட்டதாக சந்தேகப்பட்டனர் தற்போது ஒரு சிறார் உள்பட 5 பேரை கைது செய்து காவல் ஆய்வாளர் திரு மணிகண்டன் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு துரைப்பாண்டியன் அவர்கள், அவர்களின் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவர்களை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி நீதி மன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர், மேலும் ஆறு பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.மேற்கொண்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
