Police Recruitment

குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் மூன்று நபர்களை கைது செய்து சிறையில் அடைத்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் .

குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் மூன்று நபர்களை கைது செய்து சிறையில் அடைத்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் .

18.11.2020 திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமியை கோணம்பட்டி பகுதியைச் சேர்ந்த பொன்னர்(25) என்பவர் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்துள்ளார்.தற்போது சிறுமி நான்கு மாதம் கர்ப்பிணியாக உள்ளார்.இதனையறிந்த சாணார்பட்டி தொழிற்சங்க வளர்ச்சி அதிகாரி சுந்தரலட்சுமி என்பவர் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரினை தொடர்ந்து நிலைய ஆய்வாளர் திரு. பேபி அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு சிறுமியை ஆசை வார்த்தை கூறி குழந்தைத் திருமணம் செய்து கர்ப்பமாக்கிய பொன்னர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் சகோதரி ராஜம்மாள் வயது(39) மற்றும் அழகு வயது(65) ஆகிய மூன்று நபர்களையும் போக்சோ மற்றும் குழந்தை திருமண தடை சட்டத்தின் படி கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published.