Police Department News

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா காந்தப புண்னே, இ.கா.ப அவர்களின் நடைபெற்றது

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்றது

19:11:2020 திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா காந்தப புண்னே, இ.கா.ப அவர்கள் 11:11:2020 அன்று திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை நிரப்ப அறிக்கை வெளியிட்டார் அதன்படி இன்று காலை சீலப்பாடி ரோட்டில் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள பழனி திருமண மஹாலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு T. வெள்ளைச்சாமி ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு M.ஆனந்தராஜ், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படை வட்டார தளபதி திரு.அழகப்பன், துணை வட்டார தளபதி திரு. செந்தில்குமார் ஆகியோர் ஆட்களை தேர்வு செய்தனர் இதில் ஆண்கள் மொத்தம் 44 காலிப்பணியிடங்களுக்கு 561 நபர்களும் பெண்கள் 10 காலிப்பணியிடங்களுக்கு 44 பெண்களும் மொத்தம் 605 நபர்கள் கலந்து கொண்டனர் அவர்களிடம் முதலில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதித்தேர்வு போன்றவை நடத்தப்பட்டன அதனை காணொளி ஆகவும்(வீடியோ) பதிவு செய்தனர் அதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளிபிரியா இ.கா.ப,அவர்கள் நேரில் பார்வையிட்டார், இதில் தேர்வாகும் நபர்களுக்கு காவல்துறையின் மூலம் 45 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும் என்று கூறினார்கள். ஆட்கள் தேர்வு செய்வதற்கு ஆயுதப்படை காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படை காவலர்கள் 25 நபர்களும் உறுதுணையாக இருந்தனர்

Leave a Reply

Your email address will not be published.