Police Department News

மதுரை, மேலமாசி வீதியில் உள்ள பிரபல நகைக் கடையில் மோதிரத்தை திருடிய இரண்டு பெண்கள்

மதுரை, மேலமாசி வீதியில் உள்ள பிரபல நகைக் கடையில் மோதிரத்தை திருடிய இரண்டு பெண்கள்

மதுரை மாநகர், திடீர் நகர் C1, குற்றப்பிரிவு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான மேலமாசி வீதியில் உள்ள மலபார் கோல்ட்டு மற்றும் டயமண்ட் நகைக் கடையில் , இரண்டு பெண்கள் கடந்த 10 ம் தேதி நகை வாங்க வந்தனர் அவர்கள் மோதிரங்கள் உள்ள பிரிவில் மோதிரங்களை பார்வையிட்டு விட்டு அங்கிருந்த 8.195 கிராம் எடையுள்ள மோதிரத்தை எடுத்துக் கொண்டு அதற்கு பதில் போலியான ஒரு மோதிரத்தை வைத்து விட்டு சென்று விட்டனர் அவர்கள் சென்ற பின் மோதிரங்களை சரி பார்கும் போது ,8.195 கிராம் எடையுள்ள மோதிரம் மாற்றப்பட்டுள்ளது தெரிய வரவே அங்குள்ள மார்கெட்டிங் மேனேஜர் மாரிமுத்து என்பவர் உடனே cctv கேமராவை ஆய்வு செய்த போது வந்த இரண்டு பெண்கள் அதை எடுத்து சென்றது தெரிய வந்தது, உடனே நகை கடை மேலாளர் மாரிமுத்து அவர்கள் திடீர் நகர் C1, குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் திரு. முத்துப்பாண்டி அவர்கள் விரைந்து செயல்பட்டார், குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு. முத்துப்பாண்டி அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. M.கனேசன் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரித்த போது மோதிரத்தை திருடிய பெண்கள் உசிலம்பட்டி,நக்கலப்பட்டியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மனைவி சுமதி வயது 50/2020, மற்றும் அதே பகுதியை சேர்ந்த சிவமுருகன் மனைவி பிரியதர்ஷினி வயது 25/2020, எனவும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மேற்படி இரண்டு பெண்களையும் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி, நீதி மன்றத்தின் உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.