மதுரை, தெற்கு வாசல் பகுதியில் ரூபாய் 98,000/− மதிப்புள்ள தடைசெய்யபட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
மதுரை மாநகர் தெற்கு வாசல் B5, காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் திருமதி அனுராதா அவர்களின் உத்தரவின்படி சட்டம் ஒழுங்கு, மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக நிலைய சார்பு ஆய்வாளர் திரு.A.முருகன் அவர்கள் கடந்த 16 ம் தேதி பகல் ஒரு மணியளவில் ரோந்துப் பணி மேற் கொண்டார். அந்த சமயம், மஞ்சனக்கார தெரு, பாலாஜி லாரி சரவீஸ் அருகில் வரும் போது பான்மசாலா அயிட்டங்கள் அவ்விடத்தில் இருப்பதை பார்த்து விசாரித்த போது, அது மதுரை மேலமாசி வீதியை சேர்ந்த வண்கிலால் ஜீ மகன் பர்வின் ஜெயின் வயது 35/2020, அவர்களுக்கு சொந்தமானது என தெரிய வந்தது, மேலும் அதை விற்பனை செய்வதற்காக வைத்திருக்கிறார் எனவும் தெரிய வந்தது, இதனையடுத்து அவரை கைது செய்து அங்கிருந்த விமல் பான்மசாலா 102 கிலோ, மற்றும் வி-1 பான் மசாலா 19 கிலோ ஆக 121 கிலோ (பொருட்களின் மதிப்பு ரூபாய் 98, 000/−) பொருட்களை கைபற்றி நிலையம் அழைத்து வந்து அவர் மீது காவல் ஆய்வாளர் திருமதி. அனுராதா அவர்களின் உத்தரவின்படி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி கைது செய்தனர் அதன் பின் உரிய பிணையில் விடுவிக்கப்பட்டனர்
செய்தி தொகுப்பு
M.அருள்ஜோதி
மாநில செய்தியாளர்
