மதுரையில், விபத்துக்களை தடுக்க, சாலைகளை சீரமைத்து, பொது மக்களின் பாராட்டைப் பெற்ற போக்கு வரத்து காவல் ஆய்வாளர்
மதுரை, திடீர் நகர் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. பால்தாய் அவர்கள், சமூக அக்கரையுடன் அவரது காவல் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைத்து விபத்தில்லா மதுரையாக நமது பகுதியை மாற்றும் எண்ணத்தில் சமூக அக்கரையுடன் செயல்பட்டு வருகிறார்.
கடந்த 18 ம் தேதி, நமது போலீஸ் இ நியூஸ், பகுதி செய்தியாளர் , திரு. குமரன், மற்றும் ஹரிஹரன் ஆகியோர் பழங்காநத்தம் பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற போது, அங்குள்ள ரவுண்டானா பகுதியில் JCB எந்திரத்தின் மூலம் சாலை மராமத்து பணி நடந்து கொண்டிருந்தது அருகில் சென்று பார்த்த போது அங்கு திடீர் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி. பால்தாய் அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள்,
அப்பொழுதுதான் தெரிந்தது, இந்த சாலை சீரமைப்பு பணியை போக்குவரத்து காவல் துறையினர் செய்து வருகிறார்கள் என்று. அருகில் சென்று விசாரித்த போது போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி பால்தாய் அவர்கள் கூறியதாவது, போக்குவரத்திற்கு இடையூறாகவும், மற்றும் விபத்துக்களை ஏற்படுத்தும் வகையிலும் உள்ள மேடு, பள்ளங்களையும் JCB மூலம் சரி செய்து , சாலையில் பொது மக்கள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள வழிவகை செய்து வருகிறோம் என்றார்.
இந்த பணியை பொது மக்களோடு, சேர்ந்து போலீஸ் இ நியூஸ் சார்பாக நாமும் பாராட்டுவோம். அவர்களின் நற்பணி சிறக்க வாழ்த்துக்கள்
செய்தி தொகுப்பு
M.அருள்ஜோதி
மாநில செய்தியாளர்
