இருசக்கர வாகனத்தை திருடிய மூன்று நபர்களை கைது செய்த திண்டுக்கல் காவல்துறையினர்
25.11.2020 திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனை முன்பு சேவுகம்பட்டியைச் சேர்ந்த கிருபாகரன்(22) என்பவர் தனது இரு சக்கர வாகனத்தை வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்று திரும்பி வந்து பார்க்கும்போது இருசக்கர வாகனத்தை காணாததால் அருகிலுள்ள பொதுமக்களிடம் விசாரித்ததில் மூன்று நபர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது இதையடுத்து கிருபாகரன் உடனடியாக நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.செந்தில்குமார் அவர்களுக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.கோபாலகிருஷ்ணன் தலைமை காவலர் திரு.ராஜ்குமார் மற்றும் காவலர் திரு.சதீஷ்குமார் ஆகியோர் அப்பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது நகர் பகுதியில் கிருபாகரன் என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை 3 நபர்கள் ஓடி வந்ததை பார்த்த போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த ஹக்கீம் ராஜா (25), தாடிக்கொம்பைச் சேர்ந்த பிரசாந்த் (24), கோட்டூர் ஆவரம்பட்டியைச் சேர்ந்த ஜெயராமன் (28) ஆகியோர் எனத் தெரியவந்தது இதையடுத்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் திருடிச் சென்ற இருசக்கர வாகனத்தையும் மீட்டனர்…