
திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக குட்கா விற்பனையில் ஈடுபட்ட நபரின் மீது வழக்குப்பதிவு செய்து அவரது கடைக்கு சீல் வைப்பு
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ. பாஸ்கரன் அவர்களின் நடவடிக்கை. திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் தாலுகா காவல் சரகம் பழனி பைபாஸ் ராமையன்பட்டி கிராமத்தில் டீக்கடை நடத்திவரும் லாசர் (56) என்பவரது கடையை சோதனை மேற்கொண்ட போது அரசால் தடைசெய்யப்பட்ட 506 கிராம் அளவுள்ள குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்து கடந்த 15.06.2022-ம் தேதி திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். மேலும் அவரது கடைக்கு சீல் வைக்குமாறு உணவு பாதுகாப்பு துறைக்கு கோரிக்கை வைத்ததின் பேரில் நேற்று (22.06.2022) மேற்படி லாசரின் கடைக்கு ரூ. 5000 அபராதம் விதித்து சீல் வைக்கப்பட்டது.
