Police Department News

மதுரையில் குற்றங்களை தடுக்க ரவுடிகளை சுட உத்தரவு

மதுரையில் குற்றங்களை தடுக்க ரவுடிகளை சுட உத்தரவு

மதுரையில் குற்றங்களை தடுக்க ரவுடிகளை சுட டி.ஜி.பி.திரிபாதி போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சமீபகாலமாக குற்றங்களை தடுக்க செல்லும் இடங்களிலும், ரவுடிகளை பிடிக்க முயலும்போதும் அவர்களால் போலீசார் பாதிக்கப்படுகின்றனர்ஆகஸ்ட் மாதம் 18 ம் தேதி தூத்துக்குடி மணக்கரையில் ரவுடிகள் குண்டு வீசியதில் காவலர் சுப்பிரமணியன் பலியானார் இது போன்று சம்பவம் இனியும் நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க டி.ஜி.பி.திரிபாதி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து மதுரை நகரில் ரவுடிகளை கட்டுப்படுத்தவும் குற்றங்களை தடுக்கவும் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ரோந்து செல்லும் போது ரவுடிகளால் ஆபத்து ஏற்படாமல் துப்பாக்கியுடன் செல்ல போலீசாருக்கு உத்தரவிட்டார். 14 டூ வீலரில் தலா இரண்டு போலீசார் ரோந்து செல்லும் திட்டத்தை துவக்கி வைத்தார், அவர் கூறியதாவது ரவுடிகளின் நடவடிக்கை குறித்து தகவல் கிடைத்தவுடன் தாமதமின்றி செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. தவிர்க முடியாத சமயத்தில் பாதுகாப்பாக துப்பாக்கியை கையாள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.