Police Department News

மெரினா கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்மப் பொருளால் வெடிகுண்டு பீதி: நிபுணர்கள் நேரில்ஆய்வு செய்தனர் குறித்து ஆய்வு செய்த தமிழக கடலோர பாதுகாப்புக் குழும ஐ.ஜி அருணாச்சலம், டிஎஸ்பி பாலமுருகன் உள்ளிட்டோர்.

சென்னை மெரினா கடற்பரப்பில் கரை ஒதுங்கிய மர்மப் பொருளால் வெடிகுண்டு பீதி ஏற்பட்டது. போலீஸாரின் விசாரணையில் கடலில் மிதந்த பொருள் கப்பல்களில் பயன்படும் போயோ எனும் மிதவை என்பது தெரியவந்தது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

சென்னை மெரினா கடற்பரப்பில் நேற்று முன்தினம் இரவு மீனவர்கள் வழக்கம்போல் படகில் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா நினைவிடங்களின் பின்புறப் பகுதியில் ராக்கெட் வடிவிலான மர்மப் பொருள் ஒன்று கடலில் மிதந்தது.

இது வெடிகுண்டாக இருக்குமோ என்ற அச்சத்தில் இதுகுறித்து அண்ணா சதுக்கம் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தொடர்ந்து கடற்படை, கடலோர காவல் குழுமம், கடல்சார் ஆய்வு மையம் உள்ளிட்டவற்றுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

அனைத்து அதிகாரிகளும் விரைந்து வந்து மர்மப் பொருளை மீனவர்கள் உதவியுடன் கடற்கரை ஓரம் இழுத்து வந்தனர். பின்னர், வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்தனர். அதில், கடலில் மிதந்தது வெடிகுண்டு மற்றும் அதன் தொடர்புடைய பொருட்கள் இல்லை என உறுதி செய்தனர்.

போயோ எனும் மிதவை

இதுகுறித்து அண்ணா சதுக்கம் போலீஸார் கூறும்போது, “கடலில் மிதந்து வந்த ராட்சத பொருளின் எடை சுமார் 3.5 முதல் 4 டன் எடை வரை இருக்கும். இந்த பொருள் கப்பல்களில் பயன்படுத்தப்படும் போயோ எனும் மிதவை என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் அதனை உறுதிப்படுத்த மேலும் சில நிபுணர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து அச்சப்படும் வகையில் இல்லை” என்றனர்.

இதற்கிடையில், கடற்கரையில் ஒதுங்கிய மர்மப் பொருளை காண ஏராளமானவர்கள் அந்த பகுதியில் குவிந்தனர். அதில், நின்றவாறு சிலர் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.