5 பவுன் நகைகளுடன் கீழே கிடந்த மணி பர்ஸை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இருவரின் நேர்மையுள்ளத்தை பாராட்டி தூத்துகுடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ஜெயக்குமார் அவர்கள் பரிசு வழங்கி பொன்னாடை அணிவித்து பாராட்டினார்
கடந்த 28 ம் தேதி தட்டாம்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழச்செக்காரகுடி பேருந்து நிறுத்தத்தில் கோரம்பள்ளம் மாதவன் நகரை சேர்ந்த பிச்சாண்டி மகன் கருப்பசாமி என்பவர் தான் வைத்திருந்த 5 பவுன் நகையுடன் கூடிய மணிபர்ஸை தவற விட்டு சென்றுள்ளார், அப்போது அந்த வழியே வந்த கீழச்செக்காரக்குடி வடக்கு தெருவை செர்ந்த முத்துச்சாமி மகன் பிச்சாண்டி வயது 27, மற்றும் கோபாலகிருஷ்ணன் மகன் ஆறுமுகம் வயது 26, ஆகியோர் அந்தமணிபர்ஸை எடுத்து மனித நேயத்துடன் நேர்மையான முறையில் தட்டாப்பாறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து, 5 பவுன் நகைகளுடன் கீழே கிழே கிடந்த மணிபர்ஸை காவல் நிலையத்தில் ஒப்படைத்த திரு. பிச்சாண்டி , மற்றும் ஆறுமுகம் ஆகிய இருவரின் நெர்மையை பாராட்டி நேற்று (30/11/2020) தூத்துத்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயகுமார் அவர்கள் பரிசு வழங்கி பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.
இந்த நிகழ்வில் தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் கண்காணிப்பாளர் திரு.செல்வன் , பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கோபி ஆகியோர் உடன் இருந்தனர்.
