மதுரை, செல்லூர், பாண்டியன் தெருவில், மனநிலை பாதித்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை, செல்லூர் போலீசார் விசாரணை
மதுரை மாநகர், செல்லூர் D2, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான செல்லூர், கட்டபொம்மன் நகர், பாண்டியன்தெருவில் தன் குடும்பத்துடன் குடியிருந்து வருபவர் கதிரேஷன் மனைவி தனலெக்ஷிமி வயது 39/2020, இவரது கணவர் கதிரேஷன் வயது 43, இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளார்கள் அவர்கள் அனைவரும் நாய்ஸ் பள்ளியிலும், சி.இ.ஒ.இ. பள்ளியிலும் படித்து வருகின்றனர். இவரது கணவர் கதிரேஷன் டிப்ளமோ இன் இன்சினியரிங்க் படித்துள்ளார், இவர் தனது மாமனார் அவர்களின் MKP கன்ஸ்ட்ரக்சனில் சைட் இன்சினியராக வேலை பார்த்து வந்தார், இந்த நிலையில் இவருக்கு கடந்த 5 ஆண்டுகளாக Phersnoid Syenophenion என்ற மன நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு மதுரை அழகர் கோவில் ரோட்டில் உள்ள இலக்குவனார் மனநல மருத்துவ மனையில் டாக்டர், திருமதி செல்வமணி தினகரன் அவர்களிடம் சிகிச்சை பெற்று வந்தார்,வியாதி உச்ச கட்டத்தில் இருக்கும் போது இவர் மிகவும் பதட்டமாகவும் பய உணர்வோடும் இருப்பார் என்றும் நான் சாகப் போகிறேன் என்றும் கூறுவாராம்,. இந்த நிலையில் கடந்த 29 ம் தேதி இரவு குடும்பத்தாருடன் சென்று தூங்கி மறுநாள் காலை 01/12/2020 அன்று எழுந்தவர் தனக்கு காபி வேண்டுமென கேட்கவே அவரது மனைவி தனலெக்ஷிமி பால் வாங்க கடைக்கு சென்று திரும்பி வந்து பார்கையில் தன் வீட்டு படிகட்டில் தனக்கு தானே தூக்குப் போட்டு தொங்கிக் கொண்டிருந்தார், இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தனலெக்ஷிமி, தனது உறவினருக்கு தகவல் கூறி விட்டு, தனது மாமியார் அமராவதி மற்றும் தனது உறவினர் சாந்தி ஆகியோருடன் செல்லூர் D2, காவல் நிலையம் வந்து நடந்த விபரத்தை கூறி சட்டப்படியான நடவடிக்கையெடுக்க கூறி புகாரளித்தார்.
புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் விரைந்து செயல் பட்டார். ஆய்வாளர் திரு. கோட்டைசாமி அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. ஜான் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்.