தூத்துக்குடி மாவட்டத்தில் எதிர்கொள்ளவிருக்கும் புரவி புயல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களின், விழிப்புணர்வு பிரச்சாரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் எதிர்கொள்ளவிருக்கும் புரவி புயல் சம்பந்தமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயகுமார் அவர்கள் தலைமையில் காவல் துறையினர் திரேஸ்புரம் மற்றும் வைப்பார் கடற்கரை பகுதியை ஆய்வு செய்து அப்பகுதி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
தூத்துகுடி மாவட்டத்தில் புரவி புயல் சம்பந்தமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளவும் மீனவ மக்கள் மற்றும் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அனைத்து காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயகுமார் அவர்கள் உத்தரவிட்டுள்ளார் இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தூத்துக்குடி திரேஸ்புரம், மற்றும் வைப்பார் கடற்கரை பகுதிகளை ஆய்வு செய்து, அப்பகுதி மீனவ மக்களிடம் முன்னெச்சரிக்கை அப் பகுதி மீனவ மக்களிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்ததாவது புரவி புயல் சம்பந்தமாக மீனவர்களுக்கும் பொது மக்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 27 மீனவக் கிராமங்கள் உள்ளன. அவற்றில் மீன் பிடிக்கச் சென்ற அந்தந்த மீனவக் கிராம மீனவர்கள் திரும்பி வந்துள்ளனர் ஒவ்வொரு மீனவ கிராமத்திற்கும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை அதிகமாக பெய்தால் தண்ணீர் தேங்கக்கூடிய தாழ்வு பகுதிகள் 36 இடங்கள் உள்ளன. அந்த பகுதிகளுக்கு அனைத்து துறையினரும் இணைந்த குழுக்கள் அமைக்கப்பட்டு ஏதாவது பிரச்சனை ஏற்படும் போது மக்களை எவ்வாறு காப்பாற்றுவது என திட்டமிடப்பட்டுள்ளது.
காவல் துறையை பொருத்த வரையில் 40 தேசிய பேரிடர் மீட்பு படையினரும் (NDRF), 40 தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினரும் (TNDRF) மற்றும் 130 காவல் துறை பேரிடர் மீட்பு படையினர்(SDRF) வந்துள்ளனர். மேற்படி படையினர் 5 குழுக்களாக பிரித்து தண்ணீர் தேங்கக்கூடிய ஆழ்வார்திருநகரி, திருசெந்தூர், ஆத்தூர், திரேஸ்புரம், கோரம்பள்ளம், மற்றும் விளாத்திகுளம் உட்பட முக்கிய இடங்களுக்கு அனுப்பி தகுந்த உபகரணங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இதுமல்லமல் சாலைகளில் விழும் மரங்களை அகற்றுவது, உட்பட சாலைகள் சீரமைப்பதற்கும் அனைத்து காவல் நிலையங்களிலும் காவல் துறையினர் அடங்கிய சாலைகளை சீரமைக்கும் குழுக்களும் ( Road clearance team) தயார் நிலையில் உள்ளனர். மீனவர்கள் மற்றும் பொது மக்களுக்கு தெரிவித்துக்கொள்வது என்னவென்றால் இன்னும் இரண்டு நாட்களுக்கு புயல் கடக்கும் வரை யாரும் கடலுக்குள் செல்லக்கூடாது. அதே போல தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் மேடான பகுதிகள் மற்றும் அரசு அறிவித்துள்ள தங்கும் இடங்களில் தங்கியிருக்க வேண்டும். அங்கு அவர்களுக்கு உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்துள்ளார்கள். அதனால் நமது உயிர் மிகவும் முக்கியம் அதோடு நமது உடமைகளையும் காப்பாற்றுவதற்கு மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல் துறையும் தயார் நிலையில் உள்ளது எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
