காவல் துறையினர் இல்லாமல் ஒரு மணி நேரம் கூட இருக்க முடியாது, நீதிபதிகள் கருத்து
காவல் துறையினர் இல்லாமல் ஒரு மணி நேரம் கூட இருக்க முடியாது என உயர்நீதி மன்ற கிளை, மதுரை,நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக காவல் துறையில் உள்ள காலிப் பணி இடங்களை நிரப்ப கூறியும் ஊதிய உயர்வு செய்து தர கூறி கரூரை சேர்ந்த காவல் அதிகாரி மாசிலாமணி என்பவர், மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நீதிபதி கிருபாகரன் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இது தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் இல்லாமல் நம்மால் ஒரு மணி நேரம் கூட நிம்மதியாக இருக்க முடியாது, சில நிகழ்வுகள் காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக இருந்தாலும், அவர்களின் சேவை நமக்கு கட்டாயம் தேவை. தமிழகத்தில் உள்ள காவல் துறையில் எத்தனை பேர் தற்கொலை செய்துள்ளனர்? காவல் துறையில் உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு என்ன செய்துள்ளது, அவர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக தமிழக அரசு என்ன முடிவு வைத்துள்ளது? என்ற கேள்வியை எழுப்பிய நீதிபதிகள். இது குறித்து தமிழக அரசு பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தனர்.
