Police Recruitment

மதுரை, தத்தனெரி பகுதியில், மனைவி குடி பழக்கத்தை கண்டித்ததால், மனமுடைந்து கணவன் விஷம் சாப்பிட்டு தற்கொலை செல்லூர் போலீசார் விசாரணை

மதுரை, தத்தனெரி பகுதியில், மனைவி குடி பழக்கத்தை கண்டித்ததால், மனமுடைந்து கணவன் விஷம் சாப்பிட்டு தற்கொலை செல்லூர் போலீசார் விசாரணை

மதுரை மாநகர் செல்லூர் D2, காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான தத்தனெரி, கீழவைத்தியநாதபுரம் பகுதியில் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் வையாபுரி மகன் கிருஷ்ணமூர்த்தி வயது 62/2020, இவரது மனைவி பெயர் கிருஷ்ணவேணி, இவர் அந்த பகுதியில் அரிசி தவணை முறையில் கொடுத்து வியாபாரம் செய்து வருகிறார், சமீப காலமாக இவர் குடி பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார், இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 30 தேதி மாலை 7 மணியளவில் குடி பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த கிருஷ்ணமூர்த்தி விஷம் அருந்தியுள்ளார், இதையறிந்த மனைவி கிருஷணவேணி, திருப்பரங்குன்றம், ஹார்விபட்டியில் வசித்து வரும் தன் மகன் அர்ஜுன்குமாருக்கு (வயது 32/2020, ) தகவல் கூறி அவர நேராக வந்து அன்டை வீட்டார் குருமதி, மற்றும் ரேகா ஆகியோருடன் முதலுதவி செய்து வாந்தி எடுக்க செய்து விட்டு, அதன்பின் ஒரு ஆட்டோவில் நரிமேடு OCPM. பள்ளியருகில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து சென்று அங்கும் முதலுதவி பெற்று அதன்பின் அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு அழைத்து சென்று முறையான சிகிச்சை 01/12/2020 ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு எடுத்துள்ளார்கள் அதனை தொடர்ந்து கடந்த 4 ம் தேதி மதியம் 12.30 மணியளவில் இறந்து விட்டதாக மருத்துவ மனை அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து, அவரின் மகன் அர்ஜுன்குமார் செல்லூர் D2, காவல் நிலையம் வந்து புகார் அளித்தார்

புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் திரு. கோட்டைச்சாமி அவர்கள் முறையாக விசாரணை செய்தார், அதன்பின் அவரின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. ஜான் அவர்கள் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.