Police Recruitment

மதுரை, வைகையாற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு, கரிமேடு போலீசார் விசாரணை

மதுரை, வைகையாற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு, கரிமேடு போலீசார் விசாரணை

மதுரை வைகை ஆற்று நீரில் மூழ்கி சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர், அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை,ஆரப்பாளையம், மறவர் தெருவில் வசித்து வருபவர் முருகன், இவர் மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள ஶ்ரீராம் மெஸ்ஸில் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி முத்து வைகை ஆற்றுக்குள் பாலம் கட்டும் காண்ட்ராக்டில் சித்தாளாக வேலை செய்து வருகிறார் இவர்களுக்கு சுதி, சுஜி, பொன்சரஸ்வதி, கார்திகா, என நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களில் சுதியும் சுஜியும் 5 ம் வகுப்பும், பொன்சரஸ்வதி 2 ம் வகுப்பும் புட்டுத்தோப்பு ரோட்டில் உள்ள கேப்ரன் ஹால் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்கள். இவர்களில் மூத்த மகள் சுதி கேட்கும் பொருட்களை இவரின் தாய் வாங்கித்தராததால் கடந்த 2 மாதத்திற்குள் 2 முறை இவருடைய தாயாரிடம் கோபித்துக்கொண்டு தன்னிச்சையாக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார் அதன் பின் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த நிலையில் குழந்தையின் தாயார் அவர்களின் குழந்தைகளுடன் கடந்த 6 ம் தெதி இரவு 7 மணியளவில் வீட்டில் இருந்த போது மூத்த மகள் சுதி, மற்றும் சுஜி ஆகியோர்கள் தன் தாயிடம் பேனா, பென்சில் கேட்டு அடம்பிடித்துள்ளார்கள் அதற்கு அவர் கையில் பணம் இல்லை அப்பா வந்தவுடன் வாங்கித்தருகிறேன் என்று சொல்லியுள்ளார். இருப்பினும் மேற்படி இரு குழந்தைகளும் கோபித்து கொண்டு வெளியே போய் உட்கார்ந்து இருந்தனர். குழந்தைகளின் தாயார் தனது வேலைகள் எல்லாம் முடித்து விட்டு இரவு 7.15 மணிக்கு வெளியே வந்து பார்த்த போது அவருடைய இரு குழந்தைகளையும் காணவில்லை, அதன்பின் அக்கம்பக்கம் எல்லாம் தேடி பார்த்து விட்டு குழந்தைகள் கிடைக்காததால் கரிமேடு C5 , காவல் நிலையத்தில் குழந்தைகளை கண்டுபிடித்து தரும்படி புகார் கொடுத்துள்ளார், புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் திரு பாலமுருகன் அவர்களின் உத்தரவின் படி சார்பு ஆய்வாளர் திரு. M.சுந்தரபாண்டியன் அவர்கள் குழந்தைகளை தேடி வந்த நிலையில் மதுரை மேல அண்ணாதோப்பு LIC பாலம் 6 வது, 7வது தூணுக்கு இடையில் ஒரு பெண் குழந்தையின் பிரேதம் கிடப்பதாக தெரிந்து அங்கு மதியம் 1 மணியளவில் சென்று பார்த்த போது அது குழந்தை சுதியின் பிரேதம் என தெரியவந்தது. மேற்படி பிரேதத்தை ஆம்புலன்ஸில் ஏற்றும் போது, ஆரப்பாளையம் அம்மா பாலத்தில் 10 வது 11 வது தூணுக்கு இடையில் 10 அடி தூரத்தில் ஒரு குழந்தையின் பிரேதத்தை இருப்பதாக தெரிந்து அங்கு சென்று பார்த்த போது அது இரண்டாவது மகள் சுஜியின் பிரேதம் என தெரிய வந்தது. இரு குழந்தைகளின் பிரேதத்தையும் அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு எடுத்து சென்றனர். அதன் பின் குழந்தைகளின் இறப்பு சம்பந்தமாக ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்களின் வழிகாட்டுதளின் பேரில் சார்பு ஆய்வாளர் திரு. M.சுந்தரபாண்டியன் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.