*_திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.க.கார்த்திகேயன் இ.கா.ப அவர்கள் இரண்டாம் நிலைக் காவலர்களுக்கான எழுத்து தேர்வு நடந்த மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்…
திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.க.கார்த்திகேயன் இ.கா.ப அவர்கள் இரண்டாம் நிலைக் காவலர்களுக்கான எழுத்து தேர்வு நடந்த மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்…
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம்நிலைக் காவலர்,இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான 11,741 காலிப் பணியிடங்ககளுக்கான தேர்வு நடைபெறுகிறது. இக்காவலர் பணியிடங்களுக்கான முதற்கட்டமாக இன்று (13.12.2020) தமிழகம் முழுவதும் எழுத்து தேர்வு நடைபெறுகிறது.
திருப்பூர் மாநகர காவல் ஆணையர் திரு.க.கார்த்திகேயன், இ.கா.ப இன்று (13.12.2020) காலை இரண்டாம் நிலைக் காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான தேர்வு திருப்பூர் மாநகரத்தில் நடைபெற்று வரும் எழுத்து தேர்வு மையங்களான இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி,பிஷப் கால்டுவெல் பள்ளி,கொங்கு வேளாளர் மேல்நிலைப்பள்ளி மற்றும் விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி மையங்களுக்கு சென்று, பாதுகாப்பு பணிகள் மற்றும் எழுத்து தேர்வு அறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரிகளிடம் பாதுகாப்பு அறிவுரைகள் வழங்கினார்.
