மதுரை, மேலூர் அருகே, விவசாய கூலி வேலைக்கு சென்ற 17 வயது சிறுமியை காணவில்லை, கீழவளவு போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம், மேலூர் தாலூகா, கீழவளவு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சின்ன மலம்பட்டியில் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் குமார் மனைவி மீனாள் வயது 35, /2020, இவர்களுக்கு நந்தினி வயது 17/2020, என்ற மகள் உள்ளார் இவர் மலம்பட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து முடித்து விட்டு கொரோனா விடுப்பில் வீட்டில் இருந்தவர் கடந்த
30/09/2020 தேதியன்று காலையில் விவசாய கூலி வேலைக்கு சென்றார், இரவு வரை வீட்டிற்கு திரும்பி வரவில்லை அக்கம், பக்கம், மற்றும் உறவினர்களின் வீடுகளிலும் தேடிப்பார்த்தும் மகள் கிடைக்காததால் அவரின் அம்மா மீனாள் அவர்கள் கீழவளவு காவல் நிலையத்தில் தன்னுடைய மகளை கண்டுபிடித்து தரும்படி புகார் ஒன்றை கடந்த 12 ம் தேதி கொடுத்தனர், புகாரை பெற்றுக் கொண்ட வட்ட காவல் ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்கள் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் வழக்கை பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
செய்தி தொகுப்பு, M.அருள்ஜோதி, மாநில செய்தியாளர்
