மேலூர் அருகே, மது பானக்கடையை அகற்ற கோரி ஆயிரக்கணக்கானோர் போராட்டம்,மேலூர் டி.எஸ்.பி ரகுபதி ராஜா அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்
மேலூர் அருகே அரசு மது பானக் கடையை அகற்ற கோரி பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மது கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூரில் உள்ள அரசு மது பானக் கடையை அகற்ற கோரி பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஊர் மந்தையிலிருந்து அரசு மது பான் கடை வரை முழக்கங்களை எழுப்பியபடி பதாகைகளுடன் வந்து மதுக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மது கடையால் வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பதாக குற்றம் சாட்டிய பொது மக்கள் மது கடையை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தனர். இதனையடுத்து மேலூர் டி.எஸ்.பி ரகுபதி ராஜா, மற்றும் தாசில்தார் ஆகியோர் அங்கு வந்து, பேசி சமரசம் செய்து அமைதி பேச்சு வார்த்தை இன்று அவர்களுடன் நடத்தவுள்ளார்கள்.
செய்தி தொகுப்பு M.அருள்ஜோதி, மாநில செய்தியாளர்,
