மதுரையில் காவலர்கள் எழுத்து தேர்வு, மதுரை காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்கள் நேரில் சென்று வாழ்த்து கூறி, மற்றும் தேர்வை ஆய்வு செய்தார்
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 10, 097 இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், ( ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்பாளர், பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தமிழ் நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் நடத்தப்பட்டது, இதையொட்டி மதுரை மாவட்டத்தில் 42 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இதில் மதுரை மாநகரில் உள்ள 17 தேர்வு மையங்களில் எழுத்து தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களை மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார், மற்று தேர்வை பணிகளை ஆய்வு செய்தார்
