Police Recruitment

மதுரை, சிம்மக்கல், தைக்கால் 1 வது தெருவில் மின்சாரம் தாக்கிகொத்தனார் பலியான விவகாரம் வீட்டு உரிமையாளர் உட்பட இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை, சிம்மக்கல், தைக்கால் 1 வது தெருவில் மின்சாரம் தாக்கிகொத்தனார் பலியான விவகாரம் வீட்டு உரிமையாளர் உட்பட இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை, வில்லாபுரம் ஹவுஸிங் போர்ட் காலணியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் செல்வராஜ் இவரது மனைவி காளீஸ்வரி, இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாத காலமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர் மனைவி காளீஸ்வரி தனது மாமனார் சேகர் வீட்டில் இருந்து வந்துள்ளார், கணவர் செல்வராஜ் சிம்மக்கலில் தைக்கால் 3 வது தெருவில் வசிக்கும் வீரபத்திரன் மகன் வைகை லிங்கம் அவர்களிடம் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 14 ம் தேதி காலை 8 மணியளவில் தைக்கால் 1 வது தெருவில் செட்டியார் தோப்பில் உள்ள முத்துலெக்ஷிமி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் சாரங்கட்டி வேலை பார்த்து வந்தார்கள் அப்போது மதியம் சுமார் 12 மணியளவில் தடுமாறி அருகில் இருந்த மின்சாரக் கம்பியில் விழுந்து விட்டார், மின்சாரம் கடுமையாக தாக்கி இறந்து விட்டார், இந்த தகவலை கொத்தனார் வைகை லிங்கம் காளீஸ்வரிக்கு போன் மூலம் சொல்ல, அவர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தார் அதன் பின் மதுரை விளக்குத்தூண் B1 , காவல் நிலையத்தில் தன் கணவர் இறந்தது பற்றி சட்டப்படி விசாரணை செய்யும்படி புகார் அளித்தார், புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் லோகேஸ்வரி அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் ரமேஷ் அவர்கள் கட்டிட உரிமையாளர் முத்துலெக்ஷிமி, மற்றும் வைகை லிங்கம் ஆகியோர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.