மதுரை, மதிச்சியம் பகுதியில் ஆட்டோவை அடித்து நொறுக்கிய 6 பேர் மீது வழக்குப் பதிவு
மதுரை மாநகர் மதிச்சியம் E2, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான வைகை வடகரை, கன்னிவாடி மண்டபம் பின்புறம், வசிக்கும் பாலசுப்ரமணியம் மகன்விஸ்வநாத் அவர்கள் இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார்.
கடந்த 12 ம் தேதியன்று இரவு 10 மணியளவில் இவர் வீட்டிற்கு பக்கத்தில் குடியிருக்கும் பூப்பாண்டி மகன் ஹரிமுத்துப்பாண்டி விஸ்வநாதன் வீட்டிற்கு முன்பு உள்ள தண்ணீர் தொட்டியில் முகம் கழுவி எச்சில் துப்பியதில் விஸ்வநாதனுக்கும், ஹரிமுத்துப்பாண்டிக்கும் தகராறு ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் விலக்கி விட்டனர், அதன்பின் இரவு 11.30 மணியளவில் விஸ்வநாதன் தம்பி போன் செய்து வீட்டிற்கு வர சொல்லவும் விஸ்வநாதன் ஆட்டோவோடு வீட்டிற்கு வந்த போது அங்கு விஸ்வநாதனுடன் ஏற்கனவே தகராறு செய்த ஹரிமுத்துப்பாண்டி, அவரது நண்பர்கள் பாலா, தங்கப்பாண்டி, ஆண்ட்ரூஸ், மற்றும் இருவர் கதவைத் தட்டி வாடா வெளியே என்று சத்தம் போடவும் வெளியே வந்த விஸ்வநாதனின் தாத்தாவை ஹரிமுத்துப்பாண்டி கீழே தள்ளி விட்டு கல்லால் தாக்கவும் மற்றும் உடனிருந்தவர்களும்
கைகளால் அடித்தனர், இதனை தடுக்க வந்த கண் தெரியாத விஸ்வநாதனின் தம்பி முனியாண்டியையும் அடித்தனர், அவர்கள் அடிப்பதை பார்த்து விஸ்வநாதன் ஆட்டோவிலிருந்து இறங்கி வரவும் பாலா, தங்கப்பாண்டி, ஆண்ட்ரூஸ், ஆகியோர்கள் விஸ்வநாதனையும் கைகளால் அடித்தும் கீழே தள்ளியும் விஸ்வநாதனின் ஆட்டோவையும் கீழே தள்ளிவிட்டு முன்பக்க கண்ணாடியையும் உடைத்து ஆட்டோவை சேதப்படுத்தினர், உடனே விஸ்வநாதன் அவர்கள் 100 க்கு போன் செய்து காவல் வாகனம் வருவும் மேற்படி நபர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர்.அதன் பின் விஸ்வநாதனும் அவரது தாத்தாவும் அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு சென்று, சிகிச்சை பெற்றனர், அதன் பின் தகவல் பெற்று மதிச்சியம் காவல் நிலையத்தார் மருத்துவ மனை சென்று புகார் பெற்று காவல் நிலையம் வந்து ஆய்வாளர் உத்தரவின்படி, சார்பு ஆய்வாளர் திரு. கருணாநிதி அவர்கள் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.