விருதுநகர் மாவட்டம்:-
மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது…
அருப்புக்கோட்டை அருகே உள்ள கட்டகஞ்சம்பட்டியை சேர்ந்தவர் ராஜ்.
இவருடைய மனைவி லட்சுமியம்மாள் வயது73 சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
வீட்டிற்குள் திடீரென வந்த முகம் தெரியாத நபர் குடிப்பதற்காக தண்ணீர் கேட்டுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக லட்சுமியம்மாளின் கழுத்திலிருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துச்சென்றார்.
இது குறித்து லட்சுமியம்மாள் அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார்.
அவர் அளித்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட கண்காணிப்பாளர் பெருமாள் அவர்களின் உத்தரவின்படி அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சகாயஜோஸ் அவர்களின் மேற்பார்வையில் அருப்புக்கோட்டை நகர் குற்றபிரிவு ஆய்வாளர் திருமதி.ராஜபுஷ்பம்,தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன் தலைமையிலும், தீவிரமானது குற்றவாளியை தேடும் பணியில்.
தேடுதல் பணியுடன் சேர்த்து,இரவு ரோந்து பணியிலும் ஈடுபட்டிருந்தனர்.
குற்றபிரிவு காவலர்களான தலைமை காவலர்களான பாலமுருகன், ராமமூர்த்தி ஆகியோர் குழுவினர் அருப்புக்கோட்டை நான்கு வழிச்சாலை கஞ்சநாயக்கன்பட்டி விலக்கில் கண்காணிப்பு பணியில் இருந்தபோது அந்த வழியாக வந்த வாலிபரை சந்தேகத்தின் அடிப்படையில் எதேட்சையாக விசாரித்தனர்.
அந்த விசாரணையில் விளாத்திக்குளம் புதூரை சேர்ந்த அருணகிரிநாதன் வயது 32த/பெ செண்பகநாதன் என்பதும் நகை பறிப்பில் தேடப்படும் குற்றவாளி என்றும் மேற்படி தீவிர விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து லட்சுமியம்மாளிடமிருந்து பறித்த 3பவுன் தங்க சங்கிலியையும் பறிமுதல் செய்து சம்மந்தப்பட்ட நபரையும் கைது செய்தனர்.
கொள்ளை நடந்து குறுகிய காலத்தில் திறம்பட செயல்புரிந்த அருப்புக்கோட்டை துணை கண்காணிப்பாளர் தலைமையில் குற்றபிரிவு ஆய்வாளர் மற்றும் தாலுகா காவல் ஆய்வாளர்,மற்றும் குற்றபிரிவு காவலர்களுக்கும்
விருதுநகர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திரு.பெருமாள் அவர்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.