Police Recruitment

மதுரை, மேலூர் அருகே அளவுக்கு அதிகமாக மது அருந்திய முதியவர் மரணம், கீழவளவு போலீசார் விசாரணை

மதுரை, மேலூர் அருகே அளவுக்கு அதிகமாக மது அருந்திய முதியவர் மரணம், கீழவளவு போலீசார் விசாரணை

மதுரை மாவட்டம், கீழவளவு காவல் நிலைய சரக எல்லைக்குட்பட்ட பகுதியான முத்துச்சாமிபட்டி, சுமதிபுரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் மெய்யன் மகன் காளையார் அவர்கள். இவரது தந்தை மெய்யன் அவர்கள் சூரக்குடியில் இருக்கும் இவரது பேத்தி வீட்டிற்கு சென்று வருவது வழக்கம் அது போல் சென்ற 20 ம் தேதி சூரக்குடிக்கு தன் பேத்தி வீட்டிற்கு சென்று வருவதாக சொல்லி சென்றவர் அங்கு போகாமல் சுமதிபுரம் அருகே உள்ள அவரது வயல்காட்டில் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் அதிகமாக மது குடித்து விட்டு அங்கேயே படுத்தவர் இறந்து விட்டார். இது தொடர்பாக அவரது மகன் காளையார் கீழவளவு காவல் நிலையத்தில் தனது தந்தையின் இறப்பு சம்பந்தமாக சட்டப்படி விசாரணை செய்யும்படி புகார் அளித்தார், புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு முருகேசன் அவர்கள் பிரேதத்தை கைபற்றி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி உடல்கூறாய்வு செய்து வழக்கு பதிவு செய்து, ஆய்வாளர் சார்லஸ் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.