மதுரை, மேலூர் அருகே இரு சக்கர வாகனத்தின் வந்தவர் வாகன விபத்தில் மரணம், கீழவளவு போலீசார் விசாரணை
மதுரை மாவட்டம், மேலூர் அருகே மலம்பட்டி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ஆண்டி அம்பலம் மனைவி சின்னப்பொண்ணு,வயது 35/2020, இவரது கணவர் ஆண்டி அம்பலம் கட்டிட வேலை செய்து வருகிறார், இவர் கடந்த 24 ம் தேதி தனது இரு சக்கர வாகனத்தில் மாலை 4.45 மணியளவில் மேலூரில் வேலை முடித்து விட்டு மதுரை to திருச்சி நான்கு வழிச்சாலையில் தாமரைபட்டி செல்லும் ரோடு அருகே வந்து கொண்டிருக்கும் போது எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தில் மிக வேகமாகவும் கவனக்குறைவாகவும் வந்த நபர் இவரது வாகனத்தில் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார், உடனே தகவல் அறிந்த இறந்தவரின் மனைவி சின்னப்பொண்ணு கீழவளவு காவல் நிலையத்தில் புகாரளித்தார் புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் இரு சக்கர வாகனத்தில் அதி வேகமாகவும், கவன குறைவாகவும் வந்து விபத்தை ஏற்படுத்தியவர் மேலூர் அருகே சுக்காம்பட்டியை சேர்ந்த மூக்கன் மகன் ராஜா வயது 25/2020, என தெரிய வந்தது, மேலும் காவல் ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு.பாலகிருஷ்ணன் அவர்கள் வழக்கு பதிவு செய்து, சார்பு ஆய்வாளர் திருமதி.காஞ்சனாதேவி அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி தொகுப்பு, M.அருள்ஜோதி, மாநில செய்தியாளர்
