மதுரை மாநகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களின் பதிவு எண்களும் CCTV கண்காணிப்பு கேமராக்களில் பதிவு
மதுரை மாநகரில் குற்றங்கள் நடைபெறாமல் முன் கூட்டியே தடுப்பதற்காகவும் அன்னிய சந்தேக நபர்களை எளிதில் அடையாளம் காண்பதற்காகவும், குற்றவாளிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், வாகன விபத்துக்களை குறைப்பதற்க்காகவும் திருட்டு வாகனங்களை கண்டுபிடிப்பதற்காகவும் சட்ட விரோதமாக செயல்களில் ஈடுபடுபவர்களை அடையாளம் காண்பதற்காகவும், மதுரை மாநகருக்குள் நுழையும் அனைத்து வாகன ஓட்டிகளின் வாகன பதிவு எண்களை தானாக பதிவு செய்யும் 22 CCTV கண்காணிப்பு கேமராக்கள் மதுரை மாநகரில் முக்கியமான 15 இடங்களில் , தெப்பகுளம் PTR மேம்பாலம், ராமநாதபுரம் சோதனை சாவடி2, பாண்டி கோவில் சந்திப்பு,2 மேலூர் ரோடு சோதனை சாவடி,1 மேலமடை சந்திப்பு,1 கோரிப்பாளையம் AV மேம்பாலம், 1,புதிய நத்தம் சோதனை சாவடி,1 அழகர் கோவில் ரோடு சோதனை சாவடி,1 கூடல்புதூர் சோதனை சாவடி,1 புதிய பாலம்,1 சிந்தாமணி சந்திப்பு,2 மண்டேலா நகர் சந்திப்பு, 2 திருநகர் சோதனை சாவடி,1 தேனி ரோடு சோதனை சாவடி,2, திண்டுக்கல் ரோடு சோதனை சாவடி, 2 பொருத்தப்பட்டுள்ளது.
அதன் பதிவுகளை கடந்த 24 ம் தேதி மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா IPS அவர்கள் தெப்பகுளத்தில் துவக்கி வைத்து சிறப்புறையாற்றினார். 22 கேமராக்களின் பதிவுகளை கண்காணிக்கவும் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
