மதுரை மாவட்டம், மேலூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றிய செந்தில்முருகன் என்பவர் உடல் நலக் குறைவால் உயிரிழந்தார்
மதுரை அருகே பாலமேட்டை சேர்ந்த செந்தில்முருகன் 2006 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து , மேலூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய நிலையில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, மதுரை வடமலையான் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
இவரது இறுதிச் சடங்கு மதுரை பாலமேட்டில் உள்ள அவரது இல்லத்தில் 28 ம் தேதி காவல் துறை மரியாதையுடன் நடைபெற்றது. அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
போலீஸ் இ நியூஸ் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள்.
