மதுரை, மேலவாசல் பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு,திடீர் நகர் போலீசாரின் அதிரடி நடவடிக்கையில் எதிகள் அனைவரும் கைது
மதுரை மாநகர் திடீர்நகர் C1, காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட மேலவாசல் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருபவர் குமார் மனைவி மகாலெக்ஷிமி, இவர் தனது கணவர் குமார் மகன்கள் தினேஷ், ஜெயபால் , ஜெயசந்திரன் பெரியசாமி, ஆகியோருடன் வசித்து வருகிறார். கடந்த 28 ம் தேதி இவரது இரண்டாவது மகன் ஜெயபால் என்ற எலி ஜெயபாலன் மற்றும் அவனுடைய நண்பர்களுடன் பக்கத்தில் குடியிருக்கும் சேவுகன் மகன் விஜய் என்பவருடன் தகராறு ஏற்பட்டு விஜயை கத்தியால் குத்தியதில் காயம் ஏற்பட்டு, மதுரை C1, காவல்நிலையத்தில் அவன் ஜெயபாலன் என்ற எலி ஜெயபாலன், மற்றும் அவனது நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்து தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 29 ம் தேதி இரவு சுமார் ஒரு மணியளவில் மகாலெக்ஷிமியம்மாள் வீட்டு வாசலில் பலமான சத்தம் கேட்டு அவரும் அவரது மூத்த மகன் தினேஷ் மற்றும் பக்கத்தில் குடியிருக்கும் ராமச்சந்திரன் என்பவரும் வெளியில் வந்து பார்த்த போது அதே பகுதியை சேர்ந்த பாண்டியராஜன், திருமலை என்ற சிலம்பரசன், சசிக்குமார், காவேரி மணி, சுந்தர் என்ற அய்யனார் , அருண்குமார், பாண்டிமுத்து, பொன்குமார், மம்மலைராஜ், மணிகண்டன், கருப்பையா, சூரியா மற்றும் சிலர் ஒன்று சேர்ந்து நின்றுகொண்டிருந்தனர், மேலும் அவர்கள் கையில் பாட்டலில் திரியை எரியவிட்டு கையில் எறிய தயாராக வைத்திருந்தனர் அப்போது அவர்கள் உன் மகனால்தானே எங்கள் நண்பனுக்கு இந்த நிலை, அவனுக்கு ஏதாவது ஒன்று என்றால் உங்களை சும்மா விடமாட்டோம், கொழுத்திவிடுவோம் என கூறிக்கொண்டே கையிலிருந்த பாட்டிலை தூக்கி எறிந்தது விட்டு ஓடிவிட்டனர், அது சுவற்றில் பட்டு சிதறி அருகில் இருந்த ராமச்சந்திரனுக்கு சொந்தமான இருசக்கரவானத்தில் பட்டு தீப்பற்றி எரிந்தது, அதனை ராமச்சந்திரன் அணைத்தார் அதன்பின் காவல் நிலையம் வந்து எதிரிகள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்தனர்.புகாரை பெற்றுக்கொண்ட ஆய்வாளர் திருமதி. கீதாலெக்ஷிமி அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. பண ராஜ் அவர்கள் வழக்கு பதிவு செய்து மிக துரிதமாக செயல்பட்டு எதிரிகளை விரைந்து கைது செய்தனர். ஆய்வாளர் திருமதி. கீதாலெக்ஷிமி அவர்கள் விசாரணை செய்து வருகிறார்கள்.