உயிரிழந்த சார்பு ஆய்வாளரின் குடும்பத்திற்கு 16,26,500/- ரூபாய் நிதியுதவி வழங்கிய 2008- பேஜ் சார்பு ஆய்வாளர்கள்.
வீட்டிற்கே சென்று நிதி உதவி வழங்கிய காவல்துறை துணை தலைவர் அவர்கள்.
திண்டுக்கல் மாவட்டம். ஆயுதப்படை பிரிவில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்த திரு.ஸ்ரீராம் இரஞ்சித் பாபு அவர்கள் கடந்த மாதம் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து அவரின் குடும்பத்தாரின் வருங்கால நலன் கருதி 2008-ஆம் வருடம் காவல் துறையில் பணியில் சேர்ந்த தமிழகம் முழுவதும் உள்ள சார்பு ஆய்வாளர்கள் ஒன்றுசேர்ந்து திரட்டப்பட்ட ரூபாய் 16,26,500/- நிதி உதவியை, இன்று திண்டுக்கல் சரக
காவல்துறை துணை தலைவர் திரு.எம்.எஸ்.முத்துசாமி, இ.கா.ப., அவர்கள்
இறந்த சார்பு ஆய்வாளரின் இல்லத்திற்கு சென்று அவர்களின் குடும்பத்தாருக்கு வழங்கினார். உடன் நிலக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.முருகன் அவர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் இருந்தார்கள்.
