சிறப்பான புலன்விசாரனை மூலம் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த இளைஞருக்கு தூக்கு தண்டனை
புதுகோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த இளைஞருக்கு புதுகோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதி திருமதி சத்தியா அவர்கள் போக்சோ சட்டம், கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகிய 3 பிரிவுகளில் 3 தூக்கு தண்டனையும் ஆயுள்கால கடுங்காவல் சிறைத்தண்டனையும் 14 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ 10,000/− அபராதமும் விதித்து தீர்பளித்தார். மேலும் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து சிறுமியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.இவ்வழக்கை சிறப்பாக விசாரணை செய்து குற்றவாளிக்கு தண்டனை வழங்க உதவிய காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் திரு.ஜெயசீலன், மற்றும் திரு பாலமுருகன் ஆகியோருக்கு தமிழக காவல் துறை சார்பில் பாராட்டினார்கள். பொது மக்களும் காவல் துறையையும், நீதி துறையையும் பாராட்டினார்கள்.
