வடமதுரையில் ஆதரவற்ற மூதாட்டிக்கு இறுதி சடங்கு செய்த காவலர்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, வடமதுரை பேரூராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கடந்த வாரம் இறந்து கிடந்தார்.
போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு திண்டுக்கல் சவக்கிடங்கில் வைத்திருந்தனர். அதன் பின் போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற எந்த விபரமும் தெரியவில்லை இதனையடுத்து அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு மூதாட்டியின் உறவினர்கள் யாராவது இருக்கிறார்களா? என விசாரணை நடத்தினர் ஆனால் யாரும் மூதாட்டியை தேடி வரவில்லை உடனே வடமதுரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராஜகனேஷ் மற்றும் ஏட்டு செல்வராஜ் ஆகியோர் தங்கள் சொந்த செலவில் மூதாட்டியின் உடலுக்கு இறுதி சடங்கு செய்து திண்டுக்கல் கோவிந்தாபுரம் மயானத்தில் அடக்கம் செய்தனர். காவலர்களின் இந்த செயலை அந்த பகுதி மக்கள் மிகவும் பாராட்டினர்.