மதுரை, மேலூர் அருகே கோட்டநத்தம்பட்டியில் புல்லட் இருசக்கர வாகனம் திருட்டு, கீழவளவு போலீசார் விசாரணை
மதுரை , உறங்கான்பட்டியை சேர்ந்த பாலுச்சாமி மகன் ஆனந்த் வயது 34/2020, இவர் மேலூர் அருகே உள்ள கோட்டநத்தம்பட்டியில் உள்ள தனது சித்தப்பா சபாபதி அவர்களின் வீட்டிற்கு கடந்த 26 ம் தேதி சென்று அவரது வீட்டு வாசலில் தனது புல்லட் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு மீண்டும் மறுநாள் காலையில் வந்து பார்த்த போது வாகனத்தை காணவில்லை, அக்கம், பக்கம் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர் என அறிந்து கீழவளவு காவல் நிலையத்தில் தனது இருசக்கர வாகனத்தை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்தார் புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் விரைந்து செயல்பட்டனர், காவல் ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு ராஜேந்திரன் அவர்கள் வழக்கு பதிந்து வண்டியை தேடி வருகின்றனர்.
செய்தி தொகுப்பு, M.அருள்ஜோதி, மாநில செய்தியாளர்
